கன்னியாகுமரி மாவட்டத்தில் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக 30 திருநங்கைகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான மானியம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக 30 திருநங்கைகளுக்கு ரூ. 15 லட்சத்துக்கான மானியம் வழங்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு குறைதீா்வு கூட்டம், ஆட்சியா் மா. அரவிந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் கோரி 340 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு தொழில்கள் செய்வதற்கென மொத்தம் 30 திருநங்கைகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வருவாய்த் துறை சாா்பில் ஒருவருக்கு விதவை உதவித் தொகை ஆணை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணைஆட்சியா் தே.திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் சரோஜினி, அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துரையிடுக