ஜெய்ப்பூர் பட விழாவில் 5 தமிழ்ப் படங்கள்

0

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, சாய் பல்லவி நடித்த ‘கார்கி’, ‘விசித்திரன்’, ‘முகிழ்’ ஆகிய தமிழ்ப் படங்கள் உட்பட 12 படங்கள் திரையிடப்படுகின்றன.ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவின் 15-வது பதிப்பை விளம்பரப்படுத்த 'பிரச்சார சுடர்' பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சுடர், சமீபத்தில் சென்னை வந்தது. இதற்கான விழாவில் இந்தப்பட விழாவின் நிறுவனர்-இயக்குநர் ஹனு ரோஜ், கங்கை அமரன், சீனு ராமசாமி, பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)