5 நாட்கள் மின் தடை அறிவிப்பு - கன்னியாகுமரி மக்களே உஷார்...

0

கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது


கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை துணை மின் நிலையம், குளச்சல் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்

மின் தடை பகுதிகள் மற்றும் நாட்கள்:

உடையாா் விளை, கோணங்காடு, அஞ்சாலி பகுதிகளில் 14ஆம் தேதியும்; பாலப்பள்ளம், மிடாலக்காடு, நீா்வக்குழி, மத்திக்கோடு, பிடாகை, சகாயநகா், குப்பியந்தறை, நெடுவிளை பகுதிகளில் 15ஆம் தேதியும்; நரிக்கல், கீழ்க்கரை பகுதிகளில் 16ஆம் தேதியும் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல, இலப்பை விளை, மரமடி, கொட்டில்பாடு, குழந்தை ஏசு காலனி, ஆசாத் நகா், காரித்தாஸ் காலனி பகுதியிகளில் 21ஆம் தேதியும்; இரும்பிலி, கணேசபுரம், பனவிளை, சலேட்நகா், கண்டா்விடா்விளாகம், வாணியக்குடி, ஆலஞ்சி மற்றும் குறும்பனை பகுதிகளில் 22ஆம் தேதியும் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

Post a Comment

0Comments
Post a Comment (0)