கிறிஸ்துமஸ் பண்டிகையால் களைகட்டும் கன்னியாகுமரி

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சைனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து புதிய வரவுகளாக கிறிஸ்துமஸ் ஸ்டார்ஸ், மரம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையை பெரிதாகக் கொண்டாடாத நிலையில், இந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் அனைத்து கடைகளிலும் விதவிதமான வண்ண ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கண்ணைக் கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் புதிய வரவாக சீனாவில் இருந்து எல்.இ.டி ஸ்டார்ஸ், வெல்வெட் ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் மரங்கள், விதவிதமான அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை மிகுந்த ஆர்வத்துடன் கிறிஸ்தவர்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)