சுசீந்திரம் கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது.

0

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 

மார்கழி திருவிழா 

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.

 இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொடிப்பட்ட ஊர்வலம்

 சித்திரை சபை மண்டபத்தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிரசாத், தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Post a Comment

0Comments
Post a Comment (0)