பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம், ‘வணங்கான்’. நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் மார்ச் மாதம் தொடங்கியது.
ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்த நிலையில், கதையில் மாற்றங்களைச் செய்தார் பாலா. அந்த மாற்றங்கள் சூர்யாவுக்குச் சரியாக அமையாது என்பதால், படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டார் பாலா. ஆனாலும் ‘வணங்கான்’ பணிகள் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது