குமரி ரயில் நிலையத்தில் ரயிலில் தூக்கில் தொங்கிய ரயில்வே ஊழியர்...

0

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்ற பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்குப் போட்டு ரயில்வே ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மகாதானபுரம் நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன்(54). இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வேலை செய்துவந்தார். இவருக்கு லெட்சுமி என்னும் மனைவியும் இருமகன்களும் உள்ளனர். நேற்று இரவு வீட்டை விட்டுச் சென்ற சுவாமிநாதன் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் நின்றுகொண்டு இருந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார் சுவாமிநாதன்.

இன்று காலையில் ரயிலில் துப்புரவு பணி செய்ய வந்த ஊழியர்கள் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சுவாமிநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் பணிரீதியிலான மன நெருக்கடியில் தற்கொலை செய்தாரா? அல்லது அவர் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினைக் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)