நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து..

0

கனகா

கரகாட்டக்காரன் பட புகழ் கனகா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடிய படம் அது. அந்த படத்தில் வரும் காமெடிக்கு தற்போதும் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

கனகா மேலும் தங்கமான ராசா, கோயில் காளை, அதிசய பிறவி, விரலுக்கேத்த வீக்கம், கும்பக்கரை தங்கையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.


ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தீ விபத்து

இந்நிலையில் சென்னையில் கனகா வீட்டில் திடீர் தீ விபத்து இன்று ஏற்பட்டு இருக்கிறது. அவரது பூஜை அறையில் விளக்கு கீழே விழுந்து தீப்பற்றி இருக்கிறது. வீட்டில் இருக்கும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிய தொடங்கி இருக்கின்றது.

நடிகை கனகா வீட்டில் இருந்து அலறியடித்து வெளியேறியதாகவும், அதன் பின் தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைந்து இருக்கிறார்கள். 


Post a Comment

0Comments
Post a Comment (0)