அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முதல் பார்வை

0இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ளது.

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி, ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


‘உயிர் தமிழுக்கு’ படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment

0Comments
Post a Comment (0)