சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலி...

0

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள பறப்பற்று எள்ளூவிளை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் செல்வன் (36). கட்டிட தொழிலாளி. இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த மரிய ரேகா உடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் மரிய ரேகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த 3ஆம் தேதி செல்வன், மனைவியை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் பணக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக செல்வன் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மரிய ரேகா அளித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் கட்டிட தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)