ஒரே திரையில் இரண்டு படமா? புதுவித முயற்சியில் தமிழ் இயக்குனர்

0


 சமீபகாலமாக திரைத்துறையில் பல இயக்குனர்கள் புதுவிதமான படங்களை கொடுக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ஜெகன் விஜயா தற்போது ஒரே திரையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவுள்ளார்.

இப்படத்திற்கு பிகினிங் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் வினோத் கிஷன், கௌரி, சச்சின் என பலரும் நடித்துள்ளனர்.


இயக்குனர் ஜெகன் விஜயா


தற்போது படத்தை பற்றி பல விஷயங்கள் ஜெகன் விஜயா கூறியதாவது, "ஒரு திரையரங்கில் இரண்டு படங்கள் ரிலீஸ் செய்கிறோம் இதற்கு ஸ்பிளிட் ஸ்கிரீன் என பெயர். ஒரு இடத்தில் த்ரில்லர் மற்ற இடத்தில் ட்ராமாவாக திரையில் இரண்டு பக்கங்களிலும் படம் ஓடும் ஆனால் பார்வையாளர்களுக்கு குழப்பம் அடையாதவாறு கதை அமைந்திருக்கும்.

அதில் வரும் இரண்டு கதைகளுக்கும் தொடர்ப்பு இருக்கும் படத்தின் கிளைமாக்ஸில் தான் இணைவார்கள். ஆசியாவிலே ஸ்பிளிட் ஸ்கிரீன் மூலம் ரிலீஸ் செய்ய போகும் படம் இது தான்" என்றார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)