சந்திரமுகி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியாகிய சூப்பர் அப்டேட்

0
நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது.'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்திற்காக  நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்
நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் துவங்கி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐதராபாத் படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் & கங்கனா ரனாவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)