திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக 3 மணி நேரம் படகு சேவை


கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
 
அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறும். இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் சென்று அதன் அழகை கண்டு ரசிப்பர்

இந்த சூழலில் திருவள்ளுவர் சிலை கடலின் நடுவில் உள்ளதால் உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க நான்காண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படும்.  இதன் பணியானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது.  இதன் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் பொங்கல் திருநாள் முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்கப்பட உள்ளது

இந்நிலையில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் , திருவள்ளூர் சிலைக்கான  படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கூடுதலாக 3 மணி நேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

புதியது பழையவை