ஆங்கிலப் புத்தாண்டு சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

0

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்


கன்னியாகுமரி மாவட்டத்தில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், முக்கடல் சங்கமத்தைக் காண வழக்கமாக இங்கு வார விடுமுறை நாட்களில் மக்கள் பெருமளவில் வருகை தருவர். இந்த முறை ஆங்கிலப் புத்தாண்டு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில், காலையிலேயே ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர். அதேபோல், அங்குள்ள படகு முகாமில் இருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் படகுகளில் சவாரி செய்து கண்டு ரசித்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி, ஏலகிரி, ஏற்காடு, கொல்லிமலை, உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் சென்று சுற்றுலாத் தலங்கலைக் கண்டு ரசித்தனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)