அரசுப்பேருந்தின் கண்ணாடி உடைந்து விழுந்ததில் பயணி படுகாயம்..

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த அரசுப்பேருந்துகள் சரியான பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாகவே காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் நனைந்தபடி பயணிக்க வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது.

 இந்த நிலையில், இன்று(ஜன.11) தெங்கம்புதூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதைக் கண்ட பேருந்து பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)