குமரி மாவட்டத்தில் ஆன்லைன் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

0

  • உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்
  • வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் நில புரோக்கர் சேவியர் பாபு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி சுபின் என்பவரை கைது செய்தனர். அவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், உணவு கொண்டு செல்லும் பையில் கத்தி வைத்திருந்த தும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர்களை வரவழைத்து அறிவுரையும் வழங்கினார்.

உணவு விநியோகிக்கும் பணியை செய்பவர்கள், மக்களுடன் நேரடி தொடர்பு வைக்கிறார்கள். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலைக்கு சேர்க்கும் போது நன்னடத்தை சான்றி தழ்களை நிறுவனங்கள் பெற வேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார். இதேபோல் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)