போதையில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்.. கன்னியாகுமரியில் பரபரப்பு

0

ரயில்வே பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது போதையில் 60 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.

 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிய படி கிடப்பதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உடலில் சிறு சிறு காயங்களுடன் உயிருக்கு போராடிய படி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்புதுறையினர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அந்த நபரை ஸ்டச்சரில் சுமந்தபடி மேல் பகுதிக்கு வந்தனர்.


தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங்(45) என்றும், ரயில்வே பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தும் போது தவறி விழுந்ததும் தெரியவந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)