நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

0

நாகர்கோவில் ஹோலி கிறாஸ் மகளிர் கலை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி துறை வாரியாக மாணவிகள் பொங்கலிட்டனர். அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பணியாளர்களுக்கு உறியடித்தல், வடமிழுத்தல், முறுக்கு கடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாணவி களின் தமிழ்பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லூரி செயலர் அருட்சகோதரி மேரி ஹில்டா, முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி ஆகியோர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தி வழங்கினர். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாணவிகள் பேரவை அமைப்பினர் செய்திருந்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)