விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ‘VarisuHits300Crs’ என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் ஓரளவு நல்ல வருவாயை ஈட்டி வந்தது. 11 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தப் படம் வெளியாகி 26 நாட்களான நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ‘VarisuHits300Crs’ என்ற ஹேஷ்டேக்கிட்டு கொண்டாடி வருகின்றனர்.
Vasool mannan for a reason 😎#MegaBlockbusterVarisu crosses 300Crs worldwide gross collection now 🔥#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/3SjnnBIrMr
— Seven Screen Studio (@7screenstudio) February 6, 2023