கல்லூரி மாணவியின் ஆடையை கிழித்த கிப்ட் ஷாப் ஓனர்..!! பஸ் ஸ்டாப்பில் பரபர சம்பவம்..!!

0

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.


இவர் நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் சென்று வந்தார். இந்நிலையில், குளச்சல் பேருந்து நிலையத்தில் மிடாலம் ஜீவஜோதி நகரை சேர்ந்த 30 வயதாகும் ரிசிபன் என்பவர் கிஃப்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர், அந்த கல்லூரி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதலர் தினத்தன்று தனது காதலை மாணவியிடம் வெளிப்படுத்த விரும்பியிருக்கிறார் ரிசபன்.அதன்படி, பிப்ரவரி 14ஆம் தேதி மாணவி கல்லூரி செல்வதற்காக வழக்கம்போல் குளச்சல் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ரிசிபன் மாணவியிடம் சென்று ‘நீ என்னை காதலிக்க மாட்டியா?’ என கேட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மாணவியை ரிசிபன் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும், ரிசிபன் அந்த மாணவி அணிந்திருந்த கல்லூரி சீருடையை கிழித்து மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.


இதைகண்டதும் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்துள்ளனர். அதற்குள் ரிசிபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் போலீசில் புகார் அளித்தார்.


அதனடிப்படையில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் அத்துமீறிய ரோமியோ ரிசிபனை கைது செய்தனர். கல்லூரி செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த மாணவியை அடிக்கடி நோட்டமிட்டு வந்த ரிசிபன், காதலர் தினத்தில் காதலை வெளிப்படுத்திய விதத்திற்காக தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். எனவே, ஒரு தலையாக காதலிப்பதாக பெண்களை அச்சுறுத்தினால் கடைசியில் போக வேண்டிய இடம் சிறை தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)