ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

0
தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமியுன் ஒருவர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்கிற பெருமைக்குரியவர்

அத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் நிறுவினார். இவரை அப்பகுதி மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்தவகையிக் இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி, அய்யா அவதார தினத்தை அவரது பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)