அடி தூள் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

0

 பள்ளிகளுக்கு பொதுவிடுமுறையை தவிர்த்து உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.


இதற்கான உத்தரவை மாவட்டநிர்வாகங்கள் வெளியிடும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை அய்யா வைகுண்டா் பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.



சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் ஒன்று கூடி இதனை சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனையொட்டி நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அய்யா வைகுண்டரின் 191வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நாளை மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.


இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 8ம் தேதி 2வது சனிக்கிழமை பணிநாளாக கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசின் அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் குறைவான பணியாளர்களுடன் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0Comments
Post a Comment (0)