நாகர்கோவிலில் நள்ளிரவில் மதுபோதையில் நிர்வாணமாக உலா வந்த வாலிபர்

0

நாகர்கோவிலில் நள்ளிரவில் மதுபோதையில் நிர்வாணமாக வாலிபர் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

 நிா்வாணமாக உலா

 நாகர்கோவில் வடசேரி கொம்மண்டை அம்மன் கோவில் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மதுபோதையில் கீழே இறங்கினார். ஆனால் அவர் உடலில் ஆடைகள் இன்றி நிர்வாண நிலையில் இருந்துள்ளார். பின்னர் நிர்வாண கோலத்திலேயே தெருவில் அங்குமிங்குமாக சுற்றியுள்ளார். பின்னர் மீண்டும் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

 கண்காணிப்பு கேமரா

 வாலிபர் காரில் இருந்து இறங்கி வெளியே நிர்வாணமாக நடந்து சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 
இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 வீடுகள் நிறைந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஆனால் நிர்வாண நிலையில் உலா வந்த வாலிபர் யார்? எங்கிருந்து வந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவர் காரில் இருந்து நிர்வாண கோலத்தில் இறங்கி வந்ததால் கார் ஓட்டும் போதே நிர்வாண நிலையில் தான் ஓட்டிச் சென்று இருப்பாா் என்று தெரிகிறது. அவருடன் சிலர் காருக்குள் இருந்துள்ளனர்.

 எனவே கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)