போலீஸ் படையில் நேர்மை தவறாத கான்ஸ்டபிளாக குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் சூரி. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
போலீஸ் வேலைகளை செய்யும் அவரது உடல் மொழியும், நேர்மையின் பக்கம் நிற்கும் அவரது திமிரும் நிஜ போலீஸ் காரரை கண்முன் நிறுத்துகிறது. மக்கள் படை தலைவன் வாத்தியாராக விஜய் சேதுபதி. வெற்றிமாறனின் டைரக்ஷனில் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிகிறார் விஜய் சேதுபதி. உயர் அதிகாரிக்கான அச்சு அசல் உருவமாக ராஜீவ் மேனன். இரக்கமற்ற போலீஸ் அதிகாரியாக கவு மேனன் என இன்ன பிற அனைவரும் கதாபாத்திரங்களுக்கு கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். பழங்குடி பெண்ணாக வரும் பவானி மற்றும் சூரிக்கும் இடையேயான காதலில் அவ்வளவு ஆழம்.
போலீஸ் வேலை, அதற்குள் இருக்கும் சிக்கல், அதற்குள் நடக்கும் அரசியல் என அனைத்தையும் அவ்வளவு டீடெய்லாக காட்சி படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். வழக்கம் போல வெற்றிமாறனின் படத்தில் இருக்கும் ரானஸ் இந்த படத்திலும் இருக்கிறது.
தேவைப்படும் இடத்தில் பின்னணி இசையையும், பெரும் பான்மையான இடங்களில் அட்மாஸ்பியர் இசையையே பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார் இளையராஜா.
படத்தில் காட்சிகள் வழியாக கதை சொல்வதற்கு பதிலாக வாய்ஸ் ஓவர் மூலமும், உரையாடல் மூலமும் காட்சிகளை நகர்த்தி இருப்பது டாக்குமெண்ட்ரி பார்ப்பது போல இருக்கிறது. போலீஸ்காரர்கள் கொடூரர்கள் என்கிற பார்வையை, மீண்டும் ஒரு முறை கூறியிருக்கிறார் வெற்றி மாறன். வெற்றி மாறனின் படம் என்பதற்கான அனைத்து விசயங்களும் இருக்கிறது. அதோடு, டாக்குமெண்ட்ரி ஸ்டைலும் கலந்திருக்கிறது. இது விருதுகளை தரலாம், டிக்கெட்டிற்கான விலையை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
VIDUTHALAI RATING : 4/5
See More : PATHU THALA REVIEW
கருத்துரையிடுக