நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக