குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் பிந்து (வயது 23). இவர் குளச்சலில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குலசேகரம் மங்கலத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர் தக்கலையில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு பிந்து அடிக்கடி செல்லும்போது விக்னேசை சந்தித்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து பிந்து வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து தந்தையின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் காதலன் விக்னேசுடன் சென்றார்.
இதையும் படியுங்கள் :
குமரியில் 5 பஸ்கள் கல்வீசி உடைப்பு
இந்த நிலையில் பிந்துவை காணவில்லை என பெற்றோர் தேடத் தொடங்கினர். இது பற்றி தெரியவந்ததும் பிந்து, காதலன் விக்னேசுடன் நேற்று இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்து தஞ்சம் அடைந்தார்.
அப்போது காதல் ஜோடியினர் பட்டு வேட்டி, பட்டுச்சேலை அணிந்து வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை நடத்தினார். அப்போது பிந்து, தாங்கள் 5 வருடமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் போலீஸ் நிலையம் வந்தனர். அப்போது பிந்து,
காதலர் விக்னேசுடன் செல்வதில் உறுதியாக இருந்ததார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி விக்னேஷூடன் அனுப்பி வைத்தனர். அப்போது பிந்து வீட்டிலிருந்து தான் எடுத்து சென்ற ஸ்கூட்டியை தந்தையிடம் ஒப்படைத்து சென்றார்.
கருத்துரையிடுக