முதல் நாளில் ரூ.4 கோடி வசூலை ஈட்டிய நாகசைதன்யா - வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’



வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் முதல் நாள் ரூ.4 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, ப்ரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரின் ‘மன்மத லீலை’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘கஸ்டடி’யை ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் படம் முதல் நாள் மட்டும் இந்திய அளவில் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவில் முதல் நாள் வசூலிக்காத ‘கஸ்டடி’ அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் முன்னேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


 

Post a Comment

புதியது பழையவை