மற்ற மொழிகளில் தொகுப்பாளர்கள் பெரும் நட்சத்திரங்கள் என்றாலும், தமிழில் நடிப்பு ஜாம்பவான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசனின் நேர்த்தியான மற்றும் பக்குவமான பேச்சு தான் என்று சொல்ல வேண்டும். தவறுகளை எடுத்துரைப்பதிலும், போட்டியாளர்களின் பிளஸ் பாய்ண்டை சுட்டிக்காண்பிப்பதிலும் கமல்ஹாசனுக்கு நிகர் அவர் தான்.
இத்தகைய எதிர்பார்ப்பும், ரசிக படையும் உள்ள பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் குறித்த அறிவிப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது X (ட்விட்டர்) பக்கத்தில் இன்று இரவு வெளியிட்டுள்ளது. இது பிக்பாஸ் தொடரின் 7ஆவது சீசன் என்பதால் இன்று இரவு 7 மணி 7 நிமிடங்களில் இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கடற்கரையின் பின்னணியில் ஒரு காருடன் நிற்கும் கமல்ஹாசன் 'I Will Be Watching' என்ற பிக்பாஸின் வசனத்தை சொல்லாமல், அவர் ஸ்டைலின் சைகையிலேயே செய்துகாட்டுகிறார்.
இதனால், இளைஞர்கள் முதல் குடும்பத்தலைவிகள் வரை அனைத்து வயதினரும் பிக்பாஸ் தொடரின் இந்த அறிவிப்பு வீடியோவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், இதில் எப்போது பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் என மட்டுமே அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சீசனுக்கும் அதன் லோகோ மாற்றப்படும் நிலையில், இந்த சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய லோகோவும் இந்த வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக