பூஜையுடன் துவங்கும் தளபதி 68.. சென்னையில் பாடல் காட்சியுடன் சூட்டிங் துவக்கம்



சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கிடையில் அடுத்ததாக விஜய்யின் தளபதி 68 படம் குறித்தும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.



தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் குறித்த அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.


பாடல் காட்சியுடன் சூட்டிங் துவங்கும் தளபதி 68 படம்: நடிகர் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மாஸ் காட்டின. இந்நிலையில் அடுத்த வாரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.




தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள், புக்கிங்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணையவுள்ளார் விஜய். இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், லியோ படத்தின் ரிலீசுக்காக இந்தப் படத்தின் சூட்டிங் துவங்காமல் இருந்தது. 


அக்டோபர் மாதத்தில் தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 2ம் தேதி படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்படவுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த பூஜையை தொடர்ந்து அன்றைய தினமே படத்தின் சூட்டிங்கை பாடல் காட்சியுடன் துவங்க முன்னதாக படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் அந்த திட்டத்தில் தற்போது படக்குழு மாற்றம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

READ MORE : Chandramuki 2 Review 

அக்டோபர் 3ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள நிலையில் படத்திற்கான வேலைகளை அவர் ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும் மூன்று பாடல்கள் ரெடியாக உள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. எப்போதுமே விஜய் பாடல் காட்சிகளில் அசத்துவார். 

அந்த வகையில் இந்தப் பாடலும் ரசிகர்களை கவரும்வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடிக்கவுள்ளார். அப்பா -மகன் கேரக்டர்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் ஜோடி சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 


இந்தப் படத்திற்காக மாஸான கதைக்களத்துடன் வெங்கட் பிரபு களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஏகத்திற்கும் உற்சாகப்படுத்தியுள்ளது.


Post a Comment

புதியது பழையவை