விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த நிகழ்ச்சியாலும் அடித்துக் கொள்ள முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் முதல் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கப்படும் போது பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பும் விமர்சனங்களும் இருந்து வந்தது.
முன்னணி பிரபலங்கள் எப்படி தங்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆறாவது சீசன் நடந்து முடிந்தது. ஆனால் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத சர்ச்சைகளும் சண்டை சச்சரவுகளும் கடந்த ஆறாவது சீசனில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் ஆறாவது சீசன் பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் டைட்டில் கொடுக்கப்பட்டது கூட பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு பல பிரபலங்களும் கூட இந்த ஆறாவது சீசன் டைட்டில் வெற்றியாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் பலர் போட்டியாளராக வர இருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் உத்தேச பட்டியல் வெளியாகும். அதில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போதும் வெளியாகி இருக்கும் போட்டியாளரில் யார் யார் பெயர் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிராக நடிக்கும் நடிகர் குமரன், நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த், மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமடைந்த ரவீனா, அதுபோல சின்னத்திரை நடிகர் விஷ்ணு, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா உள்ளிட்ட பலர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை நிவிஷாவும் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனின் அதிகமான பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அது போல இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பிரபலமான பலர் இதில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் இந்த சீசன் ரசிகர்களுக்கு அதிகமான பிடித்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துரையிடுக