ஒருநாள், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், கணவர் சீனுவுக்கு தெரிந்துவிட்டது.. இதனால், அதிர்ச்சி அடைந்த சீனு, பிரபுஷாவிடம் இதைபற்றிக் கேட்கவும், இதுவே தகராறாக உருவெடுத்துள்ளது. இறுதியில், கணவனை விட்டுவிட்டு, 8 மாதங்களுக்கு முன்பே, தனியாக பிரிந்து சென்றுவிட்டார் பிரபுஷா
தனிக்குடித்தனம்: இவர்களது மூத்த குழந்தை, சீனுவிடமே உள்ளது. ஒரு வயதுடைய 2வது குழந்தை மட்டும், அரிஸ்டோ பியூலன், பிரபுஷாவிடம் உள்ளது. கணவனை விட்டு பிரிந்த பிரபுஷா, சதாம் உசேனுடனேயே குடும்பம் நடத்த சென்றுவிட்டார்.
தூத்துக்குடியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்கள்.. அங்கேயே வாழ்க்கையை தொடங்கியது இந்த கள்ளக்காதல் ஜோடி.. இந்நிலையில், குழந்தைக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இதனால், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை பதறியடித்து தூக்கி கொண்டு வந்தார் பிரபுஷா.. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
உல்லாசம்: இதனிடையே போலீஸாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, பிரபுஷா, சதாம் உசேன் 2 பேரையும் அஞ்சுகிராமம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தபோதுதான் உண்மையை கக்கியது அந்த ஜோடி.
2 பேரும் உல்லாசமாக இருக்கும்போதெல்லாம், அந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததாம்.. அதனால், தங்கள் உல்லாசத்துக்கு, இனியும் இடையூறாக இருக்கும் என்று நினைத்து, 2 பேருமே சேர்ந்து, குழந்தையை பலமுறை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள்.. இறுதியில், அந்த குழந்தைக்கு மது கொடுத்து, அடித்தே கொன்றிருக்கிறார்கள்.. கள்ளக்காதல் ஜோடி இப்படி சொன்னதுமே அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
சதாம் உசேன்: சதாம் உசேனுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து, சில வருடங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்துள்ளார்.. பிறகு, அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்று, திங்கள் சந்தையை சேர்ந்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.. அந்த பெண்ணையும் விட்டுவிட்டு, பிரபுஷாவிடம் வந்து சேர்ந்துள்ளார்.. இப்போது ஜோடியாக மாமியார் வீட்டுக்கு போய்விட்டார்.
2018-ல், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் குன்றத்தூர் அபிராமி... வழக்கு விசாரணைகள் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அபிராமி வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை.. எனினும், அடுத்தடுத்த அபிராமிகள் இன்னமும் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.. உலகமே அறியாத பிஞ்சுகளையும், பெற்ற தாய்மார்கள், துடிதுடிக்க கொலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
அபிராமிகள்: அபிராமி போன்றோருக்கெல்லாம் இன்னும் தண்டனை தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் இங்கே மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!!
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்
கருத்துரையிடுக