குலசேகரம் அருகே வெண்டலிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் இவரது மனைவி பிரேம கலா. இந்த தம்பதிக்கு ஆஸ்லின் (20)என்ற மகளும் ஆஷகேல் (21) என்ற மகனும் உள்ளனர். ஆஸ்லின் நட்டாலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பார்மசி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து விட்டு வந்த மாணவி யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்கு தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென மாணவி தனது துணிமணிகள், கல்லூரி சான்றிதழ் என தனக்கு தேவையான அனைத்தையும் எடுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மறுநாள் காலையில் மகளை காணாமல் பெற்றோர் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.
எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பிரேம கலா குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி துணி மற்றும் ஆவணங்களை உடனெடுத்து சென்று இருப்பதால் பெற்றோரிடம் கோபித்து கொண்டு சென்றாரா? அல்லது காதல் விவகாரமா என விசாரணை நடைபெற்று வருகிறது
கருத்துரையிடுக