தாயார் இறந்த அதிர்ச்சியில் ஜவுளிக்கடை ஊழியர் மரணம்..



நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 85). இவர், தனது மகன் மணிகண்டன் என்பவருடன் வசித்து வந்தார். மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வயோதிகம் காரணமாக புஷ்பம் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் சோகமடைந்த மணிகண்டன் தாயார் இறந்த தகவலை உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து இன்று காலை இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை மணிகண்டன் செய்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் திடீ ரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து மணிகண்டனின் மனைவி வள்ளியம்மாள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மணிகண்டனை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்தது தெரிய வந்தது. தாயார் இறந்த அதிர்ச்சியில் மணிகண்டன் பலியானது தெரியவந்தது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது உறவினர்கள் மணிகண்டன் பலியான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஒரே வீட்டில் தாய் மற்றும் மகனுக்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது. தாயார் இருந்த அதிர்ச்சியில் மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

Post a Comment

புதியது பழையவை