சூப்பர் ஸ்டார் சர்ச்சை:
இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் அவர்கள் வழக்கம் போல் குட்டி ஸ்டோரி சொல்கிறேன் என்று காடு, முயல், யானை என்று சொல்லியிருந்தார். இறுதியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று பேசியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மதுவந்தி கூறியிருப்பது, பொதுவாகவே சக்சஸ் மீட் என்பது அந்த படத்தில் பணி புரிந்த கலைஞர்கள், நடிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்வார்கள்.
மதுவந்தி பேட்டி:
விஜய் குறித்து சொன்னது:
மேலும், லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் காட்டுக்குள் யானை, முயல் கதை சொல்லி யார் பெரிய ஆள் தெரியுமா? என்றெல்லாம் பேசி இருக்கிறார். இறுதியில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருக்கிறார். உங்களுக்கே சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியும் போது எதற்கு இந்த ஒப்பீடு. தேவையில்லாமல் விமர்சனங்கள் எதற்கு? எத்தனையோ மேடைகளில் அவருடைய காலில் விழுந்து விஜய் விழுந்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது எதற்காக இந்த ஒப்பீடு. அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம்.
மதுவந்தி குறித்த தகவல்:
சூப்பர் ஸ்டாருக்கு என்றும் சூப்பர் ஸ்டார் தான் நிகர். அவருடைய இடத்தை யாராலுமே பிடிக்க முடியாது. என்று கடுமையாக விஜயை விமர்சித்து பேசி இருக்கிறார் மதுவந்தி. தற்போது இவர் பேசி இருக்கும் வீடியோ தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி. இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் ரஜினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us at WhatsApp Channel :
அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும் 👇
கருத்துரையிடுக