கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையை சேர்ந்தவர் குமார்.
கூலித்தொழிலாளி. இவரது மகள் அபிராமி. அபிராமியை நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தை சேர்ந்த டிரைவர் வினிதர்(30)என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
வினிதர் மது அருந்திவிட்டு அபிராமிவுடன் தினம் சண்டை போட்டதால் அபிராமியின் தாய் அம்பிளிகலா மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 3 வருடங்களாக அபிராமி தாய் அம்பிளிகலாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
அடிக்கடி வினிதர் மருந்து அருந்திவிட்டு மாமியார் அம்பிளிகலா வீட்டிற்கு வந்து சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பிளிகலா வீட்டிற்கு வந்த வினிதர் கத்தரிக்கோலால் வீட்டிலிருந்த துணிகளை வெட்டி நாசப்படுத்தினார். மேலும் மேசை, கதவுகளை சேதப்படுத்தினார்.
இதனை அம்பிளிகலா தட்டிக்கேட்டார். அப்போது வினிதர் அவரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இது குறித்து அம்பிளிகலா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வினிதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக