மணவாளக்குறிச்சி அருகே தாய் - மகள் மாயம்


கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சிந்துதேவி(38).

 இவர்களது 9 வயது மகள் கன்னக்குறிச்சி அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளுக்கு காய்ச்சல் வந்ததாக கூறப்படுகிறது. 

எனவே மகளுக்கு மருந்து வாங்குவதற்காக நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் தாய், மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது முருகேசன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

 போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாயையும், மகளையும் தேடி வருகின்றன

Post a Comment

புதியது பழையவை