நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலத்திற்கு சம்பவத்தன்று மாலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த சேவியர் மனைவி பாக்கிய சுகந்தி (வயது 56) என்பவரும் பயணம் செய்தார். ராமன்புதூர் சந்திப்பு வந்ததும் பஸ்சில் இருந்து
பாக்கிய சுகந்தி இறங்கினார்.
பாக்கிய சுகந்தி இறங்கினார்.
அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் நகையை மர்மநபர் அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை
அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபேஸ் செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக