இதையடுத்து நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் அந்த மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்து வந்தார்கள். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து, வியாழக்கிழமை மதியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்திருக்கிறார். அவருடன் 2 ஆண்ளும் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் அந்த இளைஞர்கள் , தப்பித்தால் போதும் என தாவி குதித்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி சென்றும் லாவகமாக தப்பினார்கள். இதையடுத்து அரைகுறை ஆடையுடன் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.
நேசமணி போலீசார், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இளம்பெண் உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவரை அம்மாண்டிவிளையை சேர்ந்த கீதா (34), வெள்ளமடத்தை சேர்ந்த சாந்தி (32) ஆகியோர் ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கீதா, சாந்தி ஆகியோரை கைது செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது ஒரு புறம் எனில், நாகர்கோவிலில் உள்ள இன்னொரு மசாஜ் சென்டரிலும் விபச்சாரம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது..
கருத்துரையிடுக