புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்து வந்த கடை வியாபாரிகள் மற்றும் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட தோடு, 

சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தவர்களை போலீசார் கைது செய்து வந்தனர். இந் நிலையில் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கண்ணுமாமூடு செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47 ) , இவர் கண்ணுமாமூடு பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

 இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் , கடந்த 9-ம் தேதி பளுகல் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது அவரது கடையில் மூட்டைகளில் 17- கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்ந்து தடை செய்யப்பட்ட கோயிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டதன் பேரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் பளுகல் காவல் நிலைய போலீசார் இணைந்து நேற்று சுரேஷ்குமாரின் கடையை சீல் வைத்தனர்.

Post a Comment

புதியது பழையவை