கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை


தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அலோசியஸ் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.


இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது  என்ற ஏக்கத்தில் ஜாக்சன் டியூக் இருந்து வந்துள்ளார்..


சம்பவத்தன்று  இரவு ஜாக்சனின் பள்ளி தோழி ஒருவர்  அஜீஸ் ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாக்சன் தன்னிடம் வீடியோ காலில், கல்லூரி கட்டணம் செல்ல முடியாததால்  தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக கூறியுள்ளார்.தாயார்  அறையில் சென்று  பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தது.  ஜன்னல் வழியே பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.


அக்கம்பக்கத்தினர்   கதவை உடைத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஜாக்சன் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




Post a Comment

புதியது பழையவை