குளச்சல், வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் ஜெகன் (47) மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி இருந்த பைக்கும் சேர்ந்து எரிந்தது. உடனே குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஷெட்டில் கட்டிப் போட்டிருந்த வளர்ப்பு நாய் தப்பி ஓட முடியாமல் கருகி பலியானது. இது குறித்து ஜெகன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
குளச்சல்: நள்ளிரவில் தீயில் கருகிய உயிர்
0
Tags
Kumari News
Premium By
Raushan Design With
Shroff Templates
கருத்துரையிடுக