Coolie Movie Review



கூலி படம் இன்று ரிலீஸாகி வெற்றிவாகை சூடி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிருத் இசையில் படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், உப்பேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என எண்ணற்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்

இதுவரை இல்லாத ரஜினி

படங்களில் கூலி படத்திற்குத்தான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் எல்லா மொழிகளிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் இந்தப் படத்தில் நடித்ததுதான். இதுவரை நாகர்ஜூனாவை ஒரு காதல் மன்னனாக ஆக்‌ஷன் ஹீரோவாக ரொமாண்டிக் மன்னனாகவேதான் பார்த்திருப்போம். ஆனால் இந்தப் படத்தில் ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார்.



அதை போல பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான அமீர்கானும் இந்தப் படத்தில் கடைசி நிமிடத்தில் கேமியோ ரோலில் வந்து அசத்தியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்திற்கு அமீர்கான் தேவையில்லாததுதான் என்று கூறி வருகிறார்கள். ஆனால் விக்ரம் படத்தில் கடைசி கிளைமாக்ஸில் சூர்யா ரோலக்ஸாக வந்து என்ன செய்தாரோ அதில் 10 % கூட அமீர்கான் கேரக்டர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் கூறுகிறார்கள்





சத்யராஜ் இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். அப்போது ரஜினி வருகிறார். ஏன் வந்தீங்க என ஸ்ருதி கேட்க இதற்கு முன் சத்யராஜுக்கும் ரஜினிக்கும் இடையே ஏதாவது பிரச்சினை இருந்ததா?அப்படி இருந்தது என்றால் அது எந்த இடத்திலும் ஸ்ருதியிடம் சத்யராஜ் சொன்னதாக தெரியவில்லை. அதனால் இங்கேயும் சில கேள்விகள் ரசிகர்களிடம் இருக்கின்றன.


உப்பேந்திரா கதாபாத்திரத்தின் எண்ட்ரி எப்போது என எதிர்பார்த்திருக்கும் நிலையில் ஒரு மாஸ் எண்டிரி கொடுக்கிறார் உப்பேந்திரா. 100 பேருக்கு நடுவில் உப்பேந்திரா மாட்டிக் கொண்டாரா என்று பார்த்தால் அந்த 100 பேரும் உப்பேந்திராவிடம்தான் சிக்கியிருக்கிறார்கள் என்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு அவருடைய கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது.



இறுதியாக சௌபின் சாஹிர். கூலி டிரெயிலரில் ரஜினி பேசும் போது ‘இவரா வில்லன்? சந்தேகமா இருக்கே? வழுக்கைத் தலை.. சரி வருமா?’ எனக் கேட்டதாக சொன்னார். ஆனால் அவருடைய சில சீன்களை லோகேஷ் என்னிடம் காட்டிய போது மிரண்டு விட்டேன். அற்புதமாக நடித்திருக்கிறார் என ரஜினி கூறியிருந்தார். அவர் சொன்னதுக்கு பல மடங்கு சௌபின் சாஹிரின் நடிப்பைத்தான்

நடிப்பைத்தான் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஏன் ரஜினி , அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜூனா என பெரிய நடிகர்கள் இருந்தும் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் சௌபின் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Coolie rating - 3 / 5 



Post a Comment

புதியது பழையவை