நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுடன் போலீசார், ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசு நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த உள்ளது. அதன்படி மதுக் கடைகள் மற்றும் டீ கடைகளை திறப்பதற்கு கட்டுபாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி நாகர்கோவில் நகரில் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்களின் கூட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் டாஸ்மாக் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் கடை முன்பு அவர்கள் நிற்பதற்கு வசதியாக வட்டம் போட வேண்டும் கடை விற்பனையாளர்களும் மது வாங்க வருபவர்கள் முககவசம் அணிய வேண்டும்.
மது வாங்க வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து அதன் அடிப்படையில் விற்பனை நடைபெறவேண்டும் என்ற நான்கு நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்தனர் அதனை ஏற்று விற்பனை செய்வதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் போலீஸிடம் உறுதியளித்தனர்.