குமரியில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

0


குறைவாக வந்த கோவேக்சின் மருந்தும் தீர்ந்து போனது. இதனால் குமரியில் 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடுவது தான் தற்போதைய ஒரே தீர்வாக கருதப்படுகிறது. குமரி மாவட்டத்தில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 25 ஆயிரத்து 122 கோவேக்சின் தடுப்பூசிகளும், ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 787 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடைசியாக வந்த ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமில் ெசலுத்தப்பட்டது. அப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2-வது  டோஸ் தேவைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஒரே நேரத்தில் அங்கு ஏராளமானோர் குவிந்ததால், டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. இருப்பு குறைவாக இருந்ததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குறைவாக வந்த தடுப்பூசியும் தீர்ந்து போனது. அதன் பிறகு கூடுதலாக தடுப்பூசிகள் அரசிடமிருந்து வரவில்லை. இதன் காரணமாக மாவட்டத்தில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நேற்று குமரி மாவட்டத்தில் எங்கும் தடுப்பூசி போடப்படவில்லை. மருந்து இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிகள் வந்ததும் உடனடியாக மக்களுக்கு செலுத்தப்படும். அதுவரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்

Post a Comment

0Comments
Post a Comment (0)