குமரியில் 33 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

0

குமரியில் 33 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதாவது கோட்டார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணகுமார், கீரிப்பாறை போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆரல்வாய்மொழியில் பணியாற்றிய சின்னத்தம்பி களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

இதுபோல், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி இரணியல் போலீஸ் நிலையத்துக்கும், சோபனராஜ் நித்திரவிளையில் இருந்து கருங்கலுக்கும், மோகன அய்யர் கருங்கலில் இருந்து கொல்லங்கோட்டிற்கும், ரசல்ராஜ் தக்கலையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஞானசிகாமணி இரணியலில் இருந்து நித்திரவிளைக்கும், ரகு பாலாஜி களியக்காவிளையில் இருந்து ஈத்தாமொழிக்கும் மற்றப்பட்டனர். 
இவர்கள் உள்பட மொத்தம் 33 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இதற்கான உத்தரவை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று பிறப்பித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)