குமரியில் 5 நாட்களாக வாகனங்கள் பறிமுதல்..


குமரிமாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிக்குட்பட்ட மணிமேடை மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையீறாக தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களை போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கார்களை மீட்பு வாகனம் மூலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த 5 நாட்களில் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை