ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு குமரியில் மீண்டும் மழை

0

இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது.


குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையால் மேற்கு பகுதியில் பல கிராமங்கள் தண்ணிரில் தத்தளித்தது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. 17-ம் தேதி இரவு முதல் மழை ஓய்ந்தது. கடந்த மூன்று நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பின்னர் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது

Post a Comment

0Comments
Post a Comment (0)