செல்போன் வாங்கி தராததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


புதுக்கடை அருகே செல்போன் வாங்கித் தராததால் 10-ம் வகுப்பு  மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுக்கடை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பூட்டேற்றி தொழிகோடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு 2 மகள்கள் உண்டு. இதில் மூத்த மகள் ஆரதி, லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். 2-வது மகள் வீணா (வயது15), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் அய்யப்பன் தனது மூத்த மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீணா தனக்கும் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், அதற்கு அய்யப்பன் பிளஸ்-2 முடித்த பின் வாங்கி தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. 

இதனால், வீணா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீணா வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வீணா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
 இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செல்போன் வாங்கித்தராததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Post a Comment

புதியது பழையவை