இளம்பெண் மீது மயக்க ‘ஸ்பிரே’ அடித்து 9 பவுன் நகை பறிப்பு

0

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளையைச் சேர்ந்தவர் மைக்கேல் (வயது 40). இவருடைய மனைவி ஜாண்மேரி (30). மைக்கேல் முட்டம் துறைமுகத்தில் மீன்வலை பின்னும் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மைக்கேல் வேலைக்கு சென்று விட்டார். இதனால், ஜாண்மேரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, மாலையில் வீட்டின் பின்பிறம் 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி குடிக்க தண்ணீர் கேட்டு வந்தார். அதைதொடர்ந்து ஜாண்மேரி தண்ணீரை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது, திடீரென அந்த ஆசாமி, ஜாண்மேரி மீது மயக்க ஸ்பிரே அடித்துள்ளார். 
சற்றும் எதிர்பாராத ஜாண்மேரி உடனே அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்து எழுந்த ஜாண்மேரி, கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருடன்… திருடன் என்று சத்தம் போட்டார்.

 சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். நடந்தவற்றை ஜாண்மேரி அவர்களிடம் கூறினார். அதைகேட்டதும் பொதுமக்கள் அந்த பகுதியில் அந்த மர்ம ஆசாமியை தேடினர். ஆனால், அந்த ஆசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை...

பின்னர், இதுகுறித்து ஜாண்மேரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டைக்காடு மணலிவிளையில் 25 பவுன் நகை திருட்டு, பிள்ளையார் கோவில் பகுதியில் 6 பவுன் நகை பறிப்பு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடர் சம்பவங்கள் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)