பள்ளிக்கே சென்று மாணவிகளை அழைத்து சென்ற அரசு பஸ்

0

நாகர்கோவிலில் பள்ளி மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் மாணவிகளுக்காக மட்டும் இயக்கப்பட்ட பேருந்துகளால், பள்ளி மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை தவிர்க்க குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள லிட்டில் ஃப்ளவர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தினந்தோறும் அதிக அளவிலான மாணவிகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்துகளில் பயணித்தனர். இதனால், அரசு பேருந்துகள் அந்த பகுதியிலுள்ளபேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் கூட செல்வது உண்டு. இதனால், கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இதனால், மாணவிகளின் வசதிக்காகவும் லிட்டில் ஃப்ளவர் மகளிர் பள்ளி வளாகத்தில் இருந்து 2 அரசு பேருந்துகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது . இது தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து மாணவி ஒருவர் கூறுகையில், தாங்கள் தினமும் பேருந்துக்காக மிகவும் சிரமபட்டு கூட்டத்தில் தொங்கியபடி பயணித்ததாகவும் பள்ளியில் இருந்து பேருந்துநிலையத்திற்க்கு செல்வதற்கே அதிகநேரம் எடுப்பதால் வீடுகளுக்கு வெல்ல தாமதமாகி விடுகிறது என்று தெரிவித்தார். இப்போது, பள்ளியில் இருந்தே பேருந்து நிலையத்துக்கு பஸ் இயக்கப்படுவதால், மிகுந்த சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)